அரசியல் முக்கியஸ்தர்களுக்காக கொழும்பில் ஏற்பாடு செய்யபப்ட்டுள்ள விருந்துபசாரம்

கொழும்பில் அரசியல் முக்கியஸ்தர்களுக்கு கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க பெருந்தொகை செலவில் விருந்துபசாரம் ஒன்றை ஏற்பாடு செய்து வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்கவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் விருந்து அளிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விருந்து நிகழ்வு புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. மேலும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் உணவின்றி தவிக்கும் போது ​​கொழும்பு மேயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வழங்கப்பட்ட இரவு உணவு நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.